உடனடி மருத்துவ உதவியை நாடுவதில் தாமதம்! - இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்
உடனடி மருத்துவ உதவியை நாடுவதில் தாமதம் ஏற்பட்டதால் கணிசமான எண்ணிக்கையிலான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடவ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அண்மையில் பதிவான உயிரிழப்புகளை ஆய்வு செய்த பின்னர் இதனை கவனிக்க முடிந்தது. சுமார் 80 வீதமான கொவிட் நோயாளிகளுக்கு கடுமையான உடல்நலக் குறைவை ஏற்படவில்லை.
எனினும், ஒரு சில நோயாளிகளுக்கு மட்டுமே கடுமையான சிக்கல்களுடன் முடிவடையும்" என்று அவர் கூறினார். கடுமையான சிக்கல்களுக்கு உள்ளானவர்களை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில் அத்தகைய நோயாளிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
எனவே, அறிகுறிகளை சிக்கல்களுக்கு இட்டுச்செல்லாமல் யாராவது நோய் தொற்று இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,