கொரோனா பேரழிவை ஒழிக்க விசேட பிரார்த்தனை!
Corona
Colombo
Sajith Premadasa
Amparai
SJB
By Chanakyan
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நாடாளவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா பேரழிவு இருளை அகற்றி “விளக்கேற்றப்பட்டப் பிரார்த்தனை”இன்று மாலை 6.06 மணிக்கு இடம் பெற்றுள்ளது.
இதன்படி கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதி்ர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகியோரினால விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் அதே நேரத்தில், நாடு முழுவதும் "பிரார்த்தனை" விளக்கேற்றல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புகாமி மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்த்தன ஆகியோர் கம்பஹாவிலும், எஸ்.எம். மரிக்கார்தலைமையில் கம்பஹா தொம்பே பகுதியிலும் ஏற்பட்டதுடன்.
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.























