விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்! இருவர் கைது
By Vasanth
புத்தளம் - மாம்புரி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலை பொலிசாருடன் இணைந்து 67 பொலித்தீன் உரைகளில் அடைக்கப்பட்ட 2125 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது
இதன்போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாம்புரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 மஞ்சள் பொதிகளையும் கடற்கரை பகுதில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மஞ்சள் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மஞ்சள் 85 இலட்சம் ரூபா பெறுமதியானதென பொலிசார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி