நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு
corona
death
nuwareliya
By Vasanth
நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09.01.2021) சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது.
டயகம கிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய செல்லையா சிதம்பரம் என்பவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவர் டயகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 01.01.2021 அன்று அனுமதிக்கப்பட்டநிலையில் நோயாளியை அங்கு ஏற்றுக் கொள்ள முடியாது என வைத்தியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுய தனிமைப்படுத்தலில் இருந்த இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே இவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி