பருத்தித்துறையில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 18 பேருக்கு கொரோனா உறுதி
corona
jaffna
people
By Shalini
பருத்தித்துறை நகர் மற்றும் குறுக்குத் தெரு பகுதிகளைச் சேர்ந்தோரிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர், முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று 156 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். ஏனைய 17 பேரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி