மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளை அலட்சியம் செய்ததால் வந்த வினை
சிங்கள-தமிழ் புத்தாண்டு காலத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மக்களின் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அல்லது குறைந்தபட்சம் மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்தனர்.
ஆனால் அரசாங்கம் அதற்கு இணங்க மறுத்துவிட்டதாலேயே தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று ரமழான் தினம் நெருங்கும் நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இனவெறி, இனவாதம் மற்றும் மதத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது, மாறாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை அல்லது எச்சரிக்கைகளின் அடிப்படையில் அல்ல.
இனவெறி முடிவுகளால் அந்த நேரத்தில் முஸ்லிம்களை குறிவைத்து கொவிட் தொற்றால் உயிரிழந்த ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.