இரண்டு விற்பனை நிலையங்களின் 15 ஊழியர்களுக்கு கொரோனா
Covid-19
Shopping
Kurunagala
By Vasanth
குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ பிரதேசத்திலுள்ள இரண்டு விற்பனை நிலையங்களில் பணியாற்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மருத்துவ அதிகாரி ஹேரத் தெரிவித்தார்.
அலவ்வ பகுதியில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார திணைக்களம் தெரிவித்ததை அடுத்து அவர் சென்றுவந்த இரண்டு வியாபார நிலையங்களின் பணியாளர்கள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.அதன்படி மேற்குறித்த நபர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களில் குறித்த இரண்டு விற்பனை நிலையங்களுக்கும் சென்றவர்கள் அலவ்வ பொதுசுகாதார பரிசோதகருக்கு தெரிவிக்குமாறு மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்