இலங்கையில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இதுவரை 13 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 170 கர்ப்பிணிகள் மற்றும் மகப்பேற்று தாய்மார்கள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு குடும்ப சுகாதார பணியகம் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோஃபார்ம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி