வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா
Covid-19
Corona Virus
Patient
Vavuniya #
By Vasanth
வவுனியா நகரப்பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று வெளியாகின. அதனடிப்படையில் வவுனியா மற்றும் குருமன்காடு பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது.
இதன்படி வவுனியா நகர கொத்தணி கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 175 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி