கனடாவை கடுமையாக தாக்கும் கொரோனா! 24 மணித்தியாளத்தில் 43 பேர் பலி - பலர் கவலைக்கிடம்
Canada
Corona
Death
People
By Chanakyan
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 43பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14 லட்சத்து 16ஆயிரத்து 317பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26ஆயிரத்து 338பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 335பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13 லட்சத்து 83ஆயிரத்து 644பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி