சீனாவில் ஐஸ் கிறீமில் கொரோனா -இழுத்து மூடப்பட்டது தொழிற்சாலை
ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ் கிறீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிச்சாலைக்கு பால் பவுடர் நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.
அந்த ஐஸ் கிறீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், உடனடியாக அந்த ஐஸ் கிறீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. ஐஸ் கிறீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஐஸ் கிறீம் தொழிற்சாலை மூடப்பட்டு அங்கு வேலை செய்துவந்த பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சீனாவில் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.