செல்லப்பிராணிகளிலும் கொரோனா - அச்சம் வேண்டாம் என தெரிவிப்பு
srilanka
corona
people
pets
By Sumithiran
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக எங்கம் பதிவாகவில்லை என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (26) தெரிவித்தது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் நுவன் ஹேவாகமகே தெரிவித்துள்ளதாவது,
வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளது.
"கொரோனா வைரஸ் 1960 களில் இருந்து விலங்குகளில் பதிவாகி உள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக எங்கும் பதிவாகவில்லை.
எனவே இந்தச் செய்தியைக் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை" எனத் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி