யானை தாக்கி உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!
sri lanka
death
people
By Shalini
ஹம்பாந்தோட்டை - கெடென்வேவ உதகம்மான பகுதியில் காட்டு யானை தாக்கி இறந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சானக காரியவசம் என்ற 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே நேற்று யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரின் சடலத்திற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் கிராமத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்