கொக்கல சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று
Covid-19
Sri Lanka
People
By Vasanth
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு நேற்றையதினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஹபரதுவா சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் சிறிவர்தன தெரிவித்தார். இதன்படி நேற்றைய பரிசோதனையில் 15 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தக வலயத்தில் உள்ள ஐந்து ஆடைத் தொழிற்சாலைகளிலேயே இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்மூலம் கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி