ஒரே பேருந்தில் பயணித்த 18 பெண்களுக்கு கொரோனா தொற்று
corona
women
traveling
By Jaso
ஹபுத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிப்பவர்களில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாங்கொடை ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 பெண்களுக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹபுத்தளையிலிருந்து பலாங்கொடை வரை, இவர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணித்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுமாறாக நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக, ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த 33 பேருக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்