வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று? வெளியாகியுள்ள தகவல்!
Corona Virus
Vavuniya
Northern Province
By Vasanth
வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் நேற்றய தினம் வெளிவந்த பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் வவுனியாவை சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில் 3 பேர் வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் வவுனியா ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்த எவருக்கும் தொற்று இல்லை என்றும் குறித்த 16 பேரும் வவுனியா நகர வியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி