ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் கொரோனா கொத்தணி
Srilanka
school
Anuradhapura
Corona cluster
By MKkamshan
ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கொரோனா பரவல் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோயியல் விஷேட வைத்திய ஆர்.எம்.எஸ்.பி ரத்னாயக்க (R.M.S.P. Ratnayake) தெரிவித்துள்ளார்.
ஹொரவ்பத்தான, பதவிய மற்றும் தலாவ பகுதியிகளில் உள்ள ஆரம்ப பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் அனுராதபுரம் நகர சபை, கலென்பிதுனுவெவ, பதவிய, தலாவ மற்றும் கஹட்டகஸ்திகிலிய போன்ற பகுதியில் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் வளச்சியடையலாம் என தொற்று நோயியல் விஷேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.