கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நபர்களுக்கும் வைத்தியசாலை வசதி மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடமளிக்க முடியாது என கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சுகாதார கட்டமைப்பில் அதற்கான வசதிகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள், ஏனைய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வலது குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் சாதாரண அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அறிகுறியே இல்லாதவர்களை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல காலதாமதம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய நோய் அறிகுறி அற்ற கொரோனா தொற்றாளர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் எனவும் அவர்களது உடல்நிலை குறித்து தொலைபேசி ஊடாக தகவல் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்