நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள செயற்றிட்டம் - சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
corona patient
health ministry
home treatment
By Sumithiran
கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்றிட்டமே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கமைய, 14 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் வைத்திய மேற்பார்வையின் கீழ் வீடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.