80 சதவீதமான பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொவிட் 19 பைசர் தடுப்பூசிகளில் 13 சதவீதமானவையே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 80 சதவீதமானவை காலவாதியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும்,கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட14.05 மில்லியன் ஃபைசர் (pfizer) தடுப்பூசிகளில் சுமார் 12 மில்லியனை அழிக்கவேண்டியுள்ளது என தெரிவித்தார்.
பக்க விளைவுகள்
கொவிட் 19 பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் தடுப்பூசி செலுத்துவதால் வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக மக்களிடையே பரவிய கருத்துக்களால் தடுப்பூசி செலுத்துவது கைவிடப்படப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு தடுப்பூசிகள் மீதமிருப்பதாகவும் காலவாதியாகாமல் இருக்கும் தடுப்பூசிகளை அயல் நாடுகளுக்கு வழங்குவது குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
[1ANAUJH[