அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ள ஜே.வி.பி
Parliament
SriLanka
AnurakumaraDissnayaka
Janatha Vimuthi Peramuna
By Chanakyan
நீதிமன்ற தீர்ப்பு குறித்த முடிவுகள் நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் எடுக்கப்பட்டால் நீதித்துறை அவசியமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரை 78 நீதிமன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இவ்வாறு ஆணைக்குழுவில் உள்ள ஊழல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சவால் செய்ய உரிமை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்