யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா
update
srilanka jaffna
jaffna corona
By Vasanth
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் சங்கானை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி