கோரத்தின் உச்சம்! ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
Corona
Shavendra Silva
Army
SriLanka
By Chanakyan
இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் மொத்தமாக 1096 கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று பரவுகை காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 30ம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்