பிரிட்டனை மிரட்டும் கொரோனா
corona
uk
increase
By Sumithiran
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,329 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 94,06,001 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புடன் 15,63,641 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இதுவரை 1 லட்சத்து 42, 338 பேர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.