வ.வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி
corona
sri lanka
vavuniya
peopla
By Shalini
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு எழுமாறான வகையில் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அன்றையதினம் பிரதேசசபையின் தவிசாளர் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சமூகமளிக்கவில்லை.
மறுநாள் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற அவர் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்