இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்கள் தொடர்பில் இந்திய ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள புதிய தகவல்!
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 97 சதவீதம் பாதுகாக்கப்படுகின்றார் என இந்தியா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆகவே, தடுப்பூசி செலுத்திக்கொள்வது கொரோனாவிற்கு எதிரான மிக முக்கியமான பாதுகாப்பு கவசமாகும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொரோனா தொற்றக்கூடியது என்றாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் மரணத்தைத் தடுக்க முடியும் என்று இந்திய ஆய்வு உறுதி செய்துள்ளது.
இந்திய அரசின் கொவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழு நேற்றைய தினம் வெளியிட்டிருந்த ஆய்வின் முடிவுகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஓகஸ்ட் வரை இந்தியாவில் கொவிட் தொற்று மற்றும் இறப்புகள் பற்றிய தரவை இந்தக்குழு பகுப்பாய்வு செய்துள்ளது.
அதனடிப்படையில் முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 96 சதவீதம் பாதுகாக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
அதேபோல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 97 சதவீதம் பாதுகாக்கப்படுகின்றார் எனவும் என்றும் அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.