எச்சரிக்கையை கண்டுகொள்ளாததால் ஏற்பட்ட விளைவு! மேல் மாகாணத்திற்கு வெளியே பரவும் கொரோனா
srilanka
corona virus
corona vaccine
By Vasanth
தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையினை பொறுப்படுத்தாததால் மேல் மாகாணத்திற்கு வெளியே கொரோனா அச்சுறுத்தலானது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது, கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் அது தொடர்பில் கவனம் செலுத்தாமை காரணமாக தற்போது நாடு முழுவதும் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், இந்த மாத இறுதியின்போது மிகவும் அபாயமான நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி