வெளிநாடுகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம்
srilanka
vaccine
corona
By Vasanth
கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்கின்றனர்.
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அடுத்த திங்கட்கிழமைக்குள் இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுப்பார் என்றும் கூறினார்.
இவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை எடுத்து 7 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்ட போதும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் ஆராய்வதாக கூறியுள்ளார்.