அரசாங்கத்தின் தற்பெருமையால் விளைவுகளை அனுபவிக்கும் மக்கள் - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் தற்பெருமையால் மக்கள் அதன் விளைவுகளை அனுபவிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை 500,000 கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. கனடா போன்ற சில நாடுகள் தங்கள் சொந்த மக்கள் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு நேரத்தில், போதுமான தடுப்பூசியை வாங்க உத்தரவிடுமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரியது. ஆனால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்தவில்லை.
இதன் விளைவுகளை மக்கள் இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளது.
கொவிட் தொற்றுநோயைத் தடுப்பதற்கு எந்தவொரு உதவியையும் வழங்க எதிர்க்கட்சி தயாராக உள்ளது, ஆனால் அந்த உதவியைப் பெற அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்