வவுனியா மாவட்ட கொரோனா பரிசோதனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
srilanka
corona
vavuniya
By Vasanth
வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.
அதனடிப்படையில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 3 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 151 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 21 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி