மட்.போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா! பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

hospital corona virus batticalo teaching
By Vasanth Jan 13, 2021 04:46 PM GMT
Report

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும். கிளினிக் நோயாளர்கள் தபாலகங்கள் மற்றும் கிராமசேவகர் ஊடாக மருந்துகளை பெற்றுகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தியனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இதுவரை 425 நோயாளர்கள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களில் 80 பேர் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு 3 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இதுவரை வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களில் 21 நபர்களுக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும்போது வைத்தியசாலையின் சேவையினை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை எங்களுக்கு ஏற்படலாம் இதனை தவிர்ப்பதற்காக நோயாளியிலிருந்து ஊழியர்களுக்கும் ஊழியர்களிலிருந்து நோயாளியிலிக்கும் தொற்று பரவுதலை தடுப்பதற்காக உடன் அமுலுக்கு வரும் வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவைகளை தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள் அதேவேளை தொற்றா நோய்களான இருதய நோய் சிறுநீரக நோய் புற்றுநோய் மற்றும் வயோதிபர் போன்றவர்களுக்கு அதி கூடிய பாதிப்புகளை ஏற்படுத்துவதால் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவதனை தவிர்த்து கிராம சேவகர் அல்லது தபால் மூலமாக உரிய மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது 065 313 3330 மற்றும் 065 313 3331 தொலைபேசி ஊடாக அழைப்பினை மேற்கொண்டும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வைத்தியசாலைக்கு அவசியம் ஏற்படும் போது மாத்திரம் நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும் அத்தோடு நோயாளிகளை பார்வையிடுவதற்கு ஒருவர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது இருந்த போதிலும் தற்போது உள்ள நிலைமை காரணமாக நோயாளிகளை பார்வையிடுவதற்கான நேரத்தை குறைத்துக் கொள்வது மிகச் சிறந்ததாகும்.

மேலும் நோயாளிக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனினும் இவ்வாறான நிலைகளில் நாங்கள் பொதுமக்களுக்கோ நோயாளிகளுக்கோ அவசியமான சேவைகளை நாங்கள் வழங்கிக் கொண்டு வருகின்றோம் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக சுகாதார நடைமுறைகளை பேணி வைத்தியசாலையின் சேவையை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016