இலங்கையில் கொரோனா தடுப்பூசி! வெளிவந்தது முழு விபரம்
ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார்.
இன்று (24) காலை சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், 500,000 மக்களும் இந்த தடுப்பூசியை பரிசாகப் பெறுவார்கள். இதற்கு எதுவும் செலவாகாது.
இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். எங்கள் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளனர்.
ற்பட்ட தொற்றுநோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதலில் தடுப்பூசி கொடுக்க உள்ளோம்.
மேலும் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கோவிட் தடுப்பூசியே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.