நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது! சபாநாயகர் விளக்கம்
srilanka
corona virus
parliament
mahinda yapa abeywardena
By Vasanth
நாடாளுமன்ற வளாகத்தினுள் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தினுள் எப்பொழுதும் கொரோனா அவதான நிலை இருந்ததில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்கள்.
அவ்வாறு சென்ற போது தொற்று ஏற்பட்டிருக்கலாமே தவிர நாடாளுமன்ற வளாகத்தில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி