உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!
#Sri Lanka #Corona Virus #People #Matara
By Vasanth
மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி மாத்தறையின் திக்வெல்ல மற்றும் யோனக்கபுர கிழக்கு, மேற்கு பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியலாங்களில் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி