இலங்கையில் இதுவரை 80 பிரபலங்களை பலியெடுத்த கொரோனா!
நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக இதுவரையில் 10, 504 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நேற்று முந்தினம் 184 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் கொரோனா தொற்றினால் இதுவரையில் 4 71,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 388,278 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் அரசாஙடகத் தகவல் திணைக்களம் வெளியிட்டள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், பணக்கார தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள், பிரபுக்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட 80இற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் உயிரிந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட கிட்டத்தட்ட 300 கலைஞர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரபல தொழிலதிபர் கப்பிடல் மஹாராஜா, மூத்த அரசியல்வாதி மங்கள சமரவீர மற்றும் பாடகர் சுனில் பெரேரரா ஆகியோர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அததுடன் இதுவரையில் 27 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொருானதா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.