மீனவர்களின் வலையில் சிக்கிய ஆணின் சடலம்!
Police
Amparai
Death Body
Akkaraipattu
By Chanakyan
அம்பாறை - அக்கறைப்பற்று கடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வழமைபோல் கடற்தொழிலாளர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வலையில் சிக்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கறைப்பற்று காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கையினை மேற்கெண்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி