தண்டனைகளுக்கு பயந்து ஒன்றிணைந்த கும்பல்: யாழில் ஜனாதிபதி அநுர பகிரங்கம்
வங்கிகளை உடைத்தவர்கள், அவுஸ்திரேலியாவில் வெள்ளையர்களை ஏமாற்றியவர்கள், எரிபொருளை வைத்து மோசடி செய்தவர்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் தண்டனைகளை நிறுத்த தற்போது ஒன்று சேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், யார் இணைந்தாலும் ஊழல்வாதிகளைத் தண்டிப்பதை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்துடன் மக்கள்
அத்தோடு, மேலிடத்தில் உள்ளவர்கள் யார் ஒன்றாக இணைந்தாலும் கீழ் இருக்கும் மக்கள் அரசாங்கத்துடன் நிற்பதாகவும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்கள் அரசாங்கத்துடன் மக்கள் இருக்கும் வரை இவ்வாறான ஒன்றிணைவுகள் வெற்றிபெறாது என்றும் ஜனாதிபதி தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |