சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு அதிரடி இடமாற்றம்
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission) அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன (P.P.S.M. Dharmaratne), சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவியில் இருந்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5 அதிகாரிகளுக்கு இடமாற்றம்
அநேரம் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் கே.பி.எம் குணரத்ன (K.P.M. Gunaratne), மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவியில் இருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
களுத்துறைக்கு பொறுப்பாக கடமையாற்றிய பிரதி காவல்துறை அதிபர் மா பி.ஏ.என்.எல். விஜேசேன (G.A.N.L. Wijesena), நலன்புரி பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் கடமைகளை நிறைவேற்றும் பெண் பிரதி காவல்துறைமா அதிபர் பத்மினி (W.J. Padmini), நலன்புரி பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் பதவியில் இருந்து களுத்துறைக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |