போர் நிறுத்தத்திலும் அடங்காத ஹிஸ்புல்லா : அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்!
லெபனான் (Lebanon) நாட்டில் பெகா பகுதியில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் (Israel) விமான படை தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபட்டால் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரித்து இருந்தநிலையில், நேற்றையதினம் (31.01.2025) இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத உற்பத்தி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட விடயங்களுக்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருந்த இராணுவ உட்கட்டமைப்பு மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா
இதேபோன்று, ஆயுதங்களை கடத்தி வேறிடங்களுக்குக் கொண்டு செல்வதற்காக சிரியா - லெபனான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த, ஹிஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பு மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்த முற்பட்டு உள்ளது.
இதனை இஸ்ரேல் விமான படை வழிமறித்து முறியடித்தது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே, இஸ்ரேல் தரப்பில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இமேவேளை, போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், இஸ்ரேல் பணய கைதிகள் மற்றும் பலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |