அமெரிக்காவின் புதிய வரியால் இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகள்! சீனாவுக்கு பேரிடி
அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளான சில நாடுகள் மீது பல்வேறு புதிய வரிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்க நிதி சட்டத்தின் உற்பத்தித் துறைகளில் உள்ள கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி குறித்து பிரிவு 301-ன் கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு பிறகு இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, கொரியா, வியட்நாம், தைவான், பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
வரிப் பட்டியலில் இலங்கை
மேலும், அமெரிக்கா தற்போது அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிப் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை.

இதன்படி வெவ்வேறு நாடுகளுக்கும் பொருட்களுக்கும் வெவ்வேறு கட்டண விகிதங்கள் பொருந்தும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில் சீனா 40% வரை என்ற மிக உயர்ந்த பொருளாதார வரி விகிதத்தை எதிர்கொள்ளவுள்ளது.
அதைத் தொடர்ந்து வியட்நாம் 35% வரையிலும், மற்ற நாடுகள் 20% அல்லது 25% என்ற விகிதத்தையும் எதிர்கொள்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |