நாடு எதிர்பார்த்த பலன் வெறும் ஒன்றரை மாதத்தில்...அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
ஒன்றரை மாதங்கள் காத்திருந்தால் ஊழல், மோசடி, இலஞ்சம், நிதி துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளில் நாடு எதிர்பார்த்த பலனைப் பெற முடியும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி துஷ்பிரயோகம் தொடர்பான எந்தவொரு விசாரணைகளையும் அரசாங்கம் நிறுத்தவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களுடனான உடன்படிக்கை
மேலும், அந்த விசாரணைகள் எதுவும் அரசியலாக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர், தனது அரசாங்கம் காவல்துறையினரை சிபாரிசு செய்து கட்டுப்படுத்தி இரகசிய காவல்துறைக்கு தேவையான பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்த விடயங்கள் அனைத்தையும் தாங்கள் சுயாதீனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி துஷ்பிரயோகத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்பது நாட்டு மக்களுடன் அரசாங்கத்தின் உடன்படிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this