தேசபந்து தென்னக்கோன் விவகாரம்...! பதவி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பதில் காவல்துறை மா அதிபர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை தலைமையக தகவல்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு அமைய இந்த சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்களில் ஒருவர் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவார் என காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நாட்டின் காவல்துறையில் சேவை மூப்பு கூடிய அதிகாரியாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் பதிநாயக்க திகழ்கின்றார்.
இந்நிலையில், தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தொடர்பான நிலைப்பாடு மற்றும் அதன் சட்ட அம்சங்கள் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூட்டப்பட்ட அவசர அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |