முடிவுக்கு வந்த 22 ஆண்டு கால வழக்கு: இலங்கையில் 6 பேருக்கு மரண தண்டனை!
2000 ஆம் ஆண்டு தெவிநுவர பிரதேசத்தில் ஐந்து பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னகோன் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு தெவிநுவரவில் வான் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, 22 வருட நீதிமன்ற விசாரணையின் போது நான்கு சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மிகுதியாய் இருந்த ஆறு பேருக்கும் இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
