ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு புதிய சரீர பிணைகளில் இவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
ஏற்கனவே அவர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவின்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தததையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போது அவரை புதிய பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றம் பிறப்பித்த மேலுமொரு உத்தரவு
மேலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்னமாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு ஜூலை 6ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.