மைத்திரியால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் (Maithripala Sirisena) விடுதலை செய்யப்பட்ட சுவீடன் நாட்டு பெண்னை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹா தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து கேட்டறிந்து பொது பாதுகாப்பு அமைச்சர் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்வதற்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கடந்த 06 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்மானத்தால் பாதிக்கப்பட்ட மனுதாரர் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு முன்னாள் அதிபர் மைத்திரி முப்பது லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த நிலையில், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஜெயமஹா வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, கொலைக் குற்றவாளியை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்த கொலை சம்பவம் 2005 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |