சுரேஷ் சல்லேயின் மனு ஒத்திவைப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று (27.07.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, முன்னாள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலைப்படுத்தபட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், நீதிமன்றத்தில் விரிவான சட்ட வாதங்களை முன்வைத்தார்.
ஒத்திவைக்கபட்ட மனு

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை நாளை (28.07.2026) மீண்டும் முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுவின் அடுத்தகட்ட விசாரணைக்கான திகதியையும் நாளைய தினம் நீதிமன்றம் நிர்ணயிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |