கட்டுநாயக்கவில் மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது!
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை வெளியே கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை (27.07.2026) காவல்துறை போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொனராகல பகுதியில் வசித்து வரும் 24 வயது ஓவியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைபொருளுடன் ஒருவர் கைது
சந்தேக நபர் காலை 9:25 மணிக்கு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் பயணப்பை சோதனை செய்யட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.480 கிலோகிராம் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
அந்த போதைப்பொருள், சாசேஜ்களைப் போல இயந்திரம் மூலம் வடிவமைக்கப்பட்டு, சாக்லேட்டால் பூசப்பட்டு, வெற்றிடமாக அடைக்கப்பட்டு, ஒரு பிரபலமான சாக்லேட் பிராண்டைப் போலவே பொட்டலமிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் சாதாரண சாக்லேட்டுகள் மற்றும் டாஃபிகளுக்கு மத்தியில் மறைக்கப்பட்டு 70 சாக்லேட் உறைகளில் கவனமாகப் பொதி செய்யப்பட்டு இருந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |