நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டவர் பலி!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Pavi
குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நாபர் 49 வயதுடைய டச்சு நாட்டை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (26.07.2026) இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி பலி
குறித்த நபர் கடலில் நீராடிக்கொண்டிந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

உயிரிழந்த நபர் இலங்கையில் நிலாவெளிப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |