வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

Hindustan Vavuniya Buddhism
By Independent Writer Sep 19, 2026 01:17 AM GMT
Report
Courtesy: Kabil

கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலைக்கு சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழு : குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

வெடுக்குநாறிமலைக்கு சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழு : குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

மோதல் ஏற்படக்கூடிய நிலை

1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு | Court Order Santhabodhi Thero Vedukkunaari Issue

இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி காவல்துறை வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாலும், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாலும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தீவிரமடையும் பசிலை நாடுகடத்தும் நடவடிக்கை! அமெரிக்காவை சென்றடைந்த இரகசிய கடிதம்

தீவிரமடையும் பசிலை நாடுகடத்தும் நடவடிக்கை! அமெரிக்காவை சென்றடைந்த இரகசிய கடிதம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்