பேராசிரியர் ரகுராம் தொடுத்த வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும் முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தொடர்ந்த வழக்கு எழுத்துமூல சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 எதிர்மனுதாரர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக வழக்கு தவணையிடப்பட்டது.
அவதூறான பதிவு
முன்னதாக 2026 ஜூலை 13 அன்று வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான், எதிர்மனுதாரர்கள் பேராசிரியருக்கு எதிராகப் பதிவிட்ட அவதூறான கருத்துக்களைச் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.

மேலும், இனிவரும் காலங்களில் பேராசிரியர் தொடர்பாக எந்தவொரு அவதூறான பதிவுகளையும் வெளியிடக் கூடாது என எதிர்மனுதாரர்களுக்கு நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |